ஆரம்ப பிரிவு மற்றும் முன்பள்ளி மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு.

0

நாட்டில் தற்போதுஏற்பட்டுள்ள கொவிட் அச்ச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தினால் நான்கு கட்டங்களாக பாடசாலைகளை திறக்க தீர்மானம் எடுக்கப்படுள்ளது.

இந்நிலையில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்பும் ஆரம்ப பிரிவு மற்றும் முன்பள்ளி மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து வசதியை ஆரம்பித்து கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கண்டியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறித்த தகவலை தெரிவித்தார்.

மேலும் குறித்த போக்குவரத்து சேவை அதிபர்கள் மற்றும் முன்பள்ளிகளின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply