இலங்கையின் பலபகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை.

0

இலங்கையின் பலபகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக இன்று மேல்,சப்பிரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளது.

அத்துடன் மேலே குறிப்பிடப்பட்ட சில பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான ஓரளவு மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வடக்கு, கிழக்கு மற்றும் இடங்களில் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply