கண்டி – அப்பர் கலஹா தோட்டப் பகுதியில் வாழும் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வருவதாக கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த பகுதியில் 45 வரையிலான குடும்பங்கள் காணப்படுகின்றன.
இவ்வாறானவர்களுக்கு இருப்பிட வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி மற்றும் மலசலகூட வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் பெரும் அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் முன்வந்து உரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



