கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்கும் பிரபல முன்னணி நடிகை யார் தெரியுமா?

0

தமிழ் சினிமா திரை உலகில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் வேதாளம் ஆகும்.

குறித்த படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்கின்றார்.
அத்துடன் இந்த படத்தில் அஜித் நடித்திருந்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கின்றார்.

மேலும் லட்சுமி மேனன் நடித்திருந்த தங்கை கதாபாத்திரத்தில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

அத்துடன் வேதாளம் படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் யார் நடிக்கப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் நடிகை தமன்னா நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply