நாடு மீண்டும் திறக்கப்படுமானால் தொடர்ந்து பின்பற்ற வேண்டிய பரிந்துரைகள் சுகாதார அமைச்சரினால் வெளியிடப்படும்.

0

எதிர்வரும் முதலாம் திகதி நாடு மீண்டும் திறக்கப்படுமானால் தொடர்ந்து பின்பற்ற வேண்டிய பரிந்துரைகள் சுகாதார அமைச்சரினால் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த தகவலை அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கொவிட் 19 தடுப்பு ஜனாதிபதி செயலனி கூட்டத்தின் போதே குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த கலந்துரையாடலில் நாட்டின் தடுப்பூசி வேலைத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் பேசப்பட்டது.

இந்நிலையில் இலங்கையின் மொத்த சனத்தொகையில் 51.6 % மனோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply