இருவாரங்களில் வெளியாகவுள்ள பரீட்சை பெறுபேறு.

0

எதிர்வரும் இருவாரங்களில் 2020ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.

இதற்கமைய குறித்த தகவலை பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்து தெரிவித்துள்ளார்.

அத்துடன் பெறுபேறுகளை தயாரிக்கும் பணிகள் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த பரீட்சையில் 622,000 மாணவர்கள் தோற்றி இருந்தனர்.

இவற்றுள் நடனம், சங்கீதம் உள்ளிட்ட பாடங்களின் செய்முறை பரீட்சைகள் இடம் பெற்றால் அதன் காரணத்தால் குறித்த பெறுபேறுகளை வெளியிட முடியாமல் போயுள்ளது.

இதன் பிரகாரம் செய்முறை பரீட்சை பெறுபேறுகளை தவிர்த்து ஏனைய எட்டு பாடங்களுக்குமான பெறுபேற்றை வெளியிடுவது தொடர்பில் அண்மையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும் இந்த பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதால் பெரும்பாலான மாணவர்கள் தற்போது இனைய வழி ஊடாக தமது உயர் வகுப்புகளில் பாடங்களை கற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply