வவுனியா நகரசபை உறுப்பினர் கொவிட் தொற்றால் மரணம்!

0

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மரணித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதற்கமைய வவுனியா நகரசபை உறுப்பினர் தர்மதாச புஞ்சிகுமாரி கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் வவுனியா தேக்கவத்தை சேர்ந்த 55 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கொவிட் தொற்றுக்கு இலக்காகி வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply