திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச முறையில் தரிசன டோக்கன்கள்!

0

நாட்டில் தற்போது ஏற்படுள்ள கொவிட் தொற்றுப் பரவல் காரணத்தால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாதாரண பக்தர்கள் வழிபட இலவச முறையில் தரிசன டோக்கன் வழங்குவது கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதற்குப் பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதியிலிருந்து சிந்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மாத்திரம் வழிபடுவதற்கு தினமும் 2,000 இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்தன.

இதற்கமைய புரட்டாசி மாதத்தையொட்டி திருமலை – திருப்பதி தேவஸ்தானம் தினமும் 8000 இலவச தரிசன டோக்கன் வழங்கும், இலவச தரிசனத்தில் அனைத்து நில பக்தர்கள், வெளிநாட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும் இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய வரும் அனைத்து பக்தர்களும் தங்களின் ஆதர் அட்டையை உடன் கொண்டு வந்து காண்பித்து இலவச தரிசன டோக்கனை பெற்று சாமி தரிசனம் செய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply