பேழை வயிரும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும்
திரண்ட முப்புரி நூல் திகழொளி மார்பும்…
… என, வருணிக்கப்படும், பிள்ளையாரை,’
கணங்களின் நாதனாக இருப்பதால்… கணபதி என்றும்,
வினைகளை களைவதால்… விநாயகன் என்றும்,
தடைகளை (விக்னங்கள்) விலக்குவதால்… விக்னேஸ்வரன் என்றும், அழைக்கிறோம்.
ஆவணி மாதத்து வளர்பிறை சதுர்த்தியன்று அவதரித்த, கணநாதரை, அதே ஆவணி மாதத்து வளர்பிறை நாளன்று வழிபட்டு மகிழ்வோம் !
