இலங்கையின் கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 7 வருடங்கள்பூர்த்தியாகியுள்ளன.
குறித்த திட்டம் கடந்த 2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 7 வருட காலப்பகுதிக்குள் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீடுகள் நேரடியாக கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 25 வருட காலப்பகுதியில் 15 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டங்களை இந்த சட்டத்தின் மூலம் பெற முடியும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வாறு இலங்கை அரசாங்கத்துடன் சீன துறைமுக பொறியியல் நிறுவனம் மேலும் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



