சென்னையில் தங்கத்தின் விலை குறைவடைந்தது!

0

தற்போது நாடு பூராகவும் கொவிட் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் பொருளாதார சூழலின் அடிப்படையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இதற்கமைய இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபா 400 குறைந்து 34,920 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை 50 ரூபா குறைந்து 4,365க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அவ்வாறு வெள்ளி விலை கிலோவுக்கு ரூபாய் 1,500 குறைந்து 1 கிலோ வெள்ளி 65,500 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply