அரிசியின் விலை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

0

இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இதன்படி நாட்டில் அரிசி வகைகள் சிலவற்றின் விலை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு மற்றும் கூட்டுறவு அமைச்சு என்பன அரிசியின் கட்டுப்பாட்டு வர்த்தமானி அறிவிப்பை திருத்த தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பா மற்றும் கீரி சம்ப ஆகியவற்றில் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பச்சை அரிசி மற்றும் நாட்டு அரிசி ஆகியவற்றின் விலைகளை மாற்றாது இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் சம்பா அரிசியின் விலையை ஒரு கிலோ 103 ரூபாவிலிருந்து 120 ரூபாவாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும் கீரி சம்பாவின் கட்டுப்பாட்டு விலையை 1 கிலோ 125 ரூபாவிலிருந்து 145 ரூபாவாக அதிகரிக்கப்படுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply