இலங்கையில் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின்சாரம் துண்டிக்கபடுமா?

0

இலங்கை மின்சார விநியோகதுக்கான கட்டணமாக மின்சார சபைக்கு கிடைக்கப் பெறவேண்டிய 44 பில்லியன் ரூபா பணம் இதுவரை கிடைக்கப்பெறாதுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே அறிவித்துள்ளார்.

இவ்வாறு கட்டணம் செலுத்தவர்களின் மின்சாரத்தினை துண்டித்து அவர்களை அசவுகரியத்திற்குள்ளாகும் நடவடிக்கை இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் நாட்டில் தற்போது நிலவும் கொவிட் அச்சுறுத்தலை காரணத்தால் பலர் தங்கள் மின் கட்டணங்களை செலுத்த முடியாதுள்ளதாகவும் குறிப்பிட்டள்ளார்.

இவ்வாறு மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின்சாரத்தை துண்டிக்க இதுவரையில் அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பொதுமக்கள் தொடர்ந்து மின் கட்டணத்தைச் செலுத்த தாமதிப்பதை அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்,

Leave a Reply