இனையவழி கற்பித்தல் முறையினை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு காவற்துறையினரால் விசேட அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இனையவழி கற்பித்தல் முறையினை பாடசாலை மாணவர்களுக்கு மேற்கொள்ளும் போது ஆசிரியர்களுக்கு எவரேனும் ஒருவரால் குறித்த கற்பித்தல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுமாயின் குறித்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு நேரடியாக முறைப்பாடொன்றை பதிவு செய்யுமாறு காவல்துறை தலைமையகம் அறிவித்தல் வெளியிட்டுள்ளது.
அவ்வாறான பிரச்சினைகள் எழும் பட்ஷத்தில் 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அவசர அழைப்பு பிரிவினருக்கு இந்த விடயம் தொடர்பில் அறிவிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில் தாமதிக்காமல், சரியான முறையில் மிகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அறிவுறுத்தியுள்ளார்.



