திருகோணமலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள்!

0

கொவிட் வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதனால் தமது வாழ்வாதாரங்களை இழந்த திருகோணமலை மாவட்டத்தின் ஆண்டான்குளம் கிராம சேவகர் உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த வறிய நான்கு குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் கவனத்திற்கு கிடைக்கப்பெற்றது.

அதனை அடுத்து மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த நான்கு குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அவசியமான உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு இன்று (14)நடவடிக்கை எடுத்தார் .

அந்த அடிப்படையில் அவர்களுக்கான உலர் உணவு பொருட்கள் இன்று மாவட்ட செயலகத்தில் வைத்து மாவட்ட அரசாங்க அதிபரால் வழங்கி வைக்கப்பட்டது. இதில் விசேட தேவையுடைய ஒருவரும் பொருளாதார ரீதியாக மிக வறுமைக்குட்பட்ட மூன்று குடும்பங்களும் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாவட்ட அரசாங்க அதிபர் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் இவ்வாறான விசேட தேவையுடையவர்கள், மிக வறிய குடும்பங்கள் உடையவர்களின் தேவையறிந்து அவசியமான உதவிகளை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்படும் இவ்வுதவிகள் மாவட்ட செயலகத்திற்கு கிடைக்கப்பெறுவதுடன் அவை அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலிற்கிணங்க பிரதேச செயலகங்களுக்கும் உரிய தேவையுடையவர்களுக்கு வழங்குவதற்காக பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply