அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் பருப்பின் விலை மேலும் அதிகரிக்க சந்தர்ப்பம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய குறித்த தகவலை அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன் தற்போது பருப்பு 1 கிலோவின் விலை 250 ரூபாவாகும்.
ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் இருந்து பருப்பு இறக்குமதி செய்யப்படுகின்றது.
இந்நிலையில் கனடாவில் விளைச்சல் குறைவாக இருப்பதால் அதன் தாக்கம் இலங்கை சந்தையில் விலை அதிகரிப்பை ஏற்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..



