நட்டை முழுமையாக திறப்பதற்கு தீர்மானம்!

0

எதிர்வரும் 21ஆம் திகதி பின்னர் நட்டை முழுமையாக திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையானது எதிர்வரும் 21ஆம் திகதி முடிவுக்கு வரும் நிலையில் அதன் பின்னர் நாட்டை முழுமையாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபற்றற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் பின்னர் நாட்டின் வழமையான செயற்பாடுகள் தொடர்வது பற்றிய பரிந்துரையைகளை அறிக்கையாக முன் வைக்கும் படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க 21ஆம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளார்.

மேலும் ஜனாதிபதி அமெரிக்கா செல்வதற்கு முன்னர் நாடு திறக்கப்படும் தீர்மானம் குறித்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply