பேராசிரியர் W.D. லக்ஷ்மன் மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்து வந்த நிலையில் தற்போது தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
இதற்கமைய இவர் கடந்த 2019 டிசம்பர் மாதம் முதல் இலங்கை மத்திய வங்கி ஆளுநராக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் குறித்த கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்ததாக பேராசிரியர் லக்ஷ்மன் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவர் தனது கடமைகளை நாளைய தினம் பொறுப்பேற்கவுள்ளார் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.



