நாடு பூராகவும் தடுப்பூசி செலுத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன் பிரகாரம் இதுவரையில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாத மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் நாளைய தினம் முதல் கடலுக்குச் செல்லவும், பொது இடங்களில் நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மன்னாரில் நேற்று நடைபெற்ற கொவிட் 19 தடுப்பு குழு கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலும் மன்னார் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கும், இந்தியர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் குறித்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



