இலங்கையின் முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திக ஜெயசிங்கவுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட பி. சி. ஆர் பரிசோதனைகளின் முடிவுகளின் பிரகாரம் இவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரது இரு குழந்தைகளுக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.
அத்துடன் இவர் 2000ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் மகளிர் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று வெள்ளி பதக்கத்தையும் பெற்று சாதனை படைத்தவர்.
மேலும் இவர் இரண்டு உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.



