மாலைதீவுக்கு மணல் ஏற்றுமதி செய்யப்பட்டதாக வெளியான தகவல் போலியானது!

0

மாலைதீவுக்கு இலங்கையில் இருந்து மணல் ஏற்றுமதி செய்யப் பட்டதாக வெளியான தகவல் போலியானது என தகவல் வெளியாகியுள்ளது,

இதற்கமைய மாலைதீவில் புதிய தீவு ஒன்றை நிரப்புவதற்காக இலங்கையில் இருந்து மணல் ஏற்றுமதி செய்யப் பட்டதாக வெளியான தகவல் போலியானது என புவிச்சரிதவியல் மற்றும் அளவை சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த விடயத்தை அதன் பணிப்பாளர் நாயகம் சஜ்ஜன டி சில்வா அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் மாலைதீவில் கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை நிறுவனம் ஒன்றுக்கு பயன்படும் வர்த்தக ரீதியிலான மணல் தொகை மாத்திரம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அவ்வாறு குறித்த மணலானது குழாய் இணைப்பு மற்றும் நீர்நிலைகளை நிரப்புவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது..

அதற்காக 8 க்யுப் மணல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில் க்யுப் ஒன்றுக்கு 180,000 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் அறுவடை பட்டுள்ளதாகவும் குறித்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply