பாலிவுட் படத்தில் தளபதி விஜய்?

0

தமிழ் சினிமா திரை உலகில் மிகப் பெரும் ரசிகர் வட்டத்தை கொண்ட நடிகர் தான் தளபதி விஜய்.

இவரது படம் வெளியாகிறது என்றால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

அதிலும் கடைசியாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், சர்க்கார், பிகில், மாஸ்டர் என அனைத்து படங்களும் ரூபாய் 200 கோடி வசூலை கடந்து சென்றது.

இந்நிலையில் அட்லி தற்போது ஷாருக்கானை வைத்து எடுக்கும் படத்தில் விஜய் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் பிரபுதேவாவுக்காக அக்ஷய் குமார் படத்தில் விஜய் கெஸ்டா ரோலில் நடித்துள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply