தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் தரையிறங்கியது!

0

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 7 மணிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜா நகருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது.

குறித்த விமானத்தில் 170 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் உட்பட மொத்தமாக 176 பேர் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த விமானம் புறப்பட்டு 30 நிமிடங்களில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதனையடுத்து துரிதமாக செயற்பட்ட விமானி விமானத்தை மீண்டும் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு திருப்பி பத்திரமாக தரையிறக்கினார்.

இதனால் 176 பேருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

மேலும் 170 பயணிகளும் மாற்று விமானம் மூலம் சார்ஜ் நகருக்கு புறப்பட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply