இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 15 வயதிற்கு மேற்பட்ட கல்விப் பொதுத் தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளில் தோன்றவுள்ள மாணவர்களுக்கே அடுத்த மாதம் முற்பகுதியில் முதல் தடுப்பூசியை செலுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன்இந்த விடயத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மத்தியகுழு உறுப்பினர் நளின்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய ஆவணம் கொவிட் தடுப்பு ஜனாதிபதி செயலனியிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



