விநாயகர் சிலைகளை கரைக்க குளக் கட்டு சென்ற மக்கள் அதிர்ச்சியில்!

0

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழிபட்ட விநாயகர் சிலைகளை கரைக்க குளக் கட்டு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த குளக்கட்டில் பொதுமக்கள் சிலைகளைக் கரைத்து வந்தனர்.

இதற்கமைய அந்தக் குளத்திலிருந்து 4 அடி நீளமுள்ள முதலை ஒன்று வெளியே வந்தது அதனைக் கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் இதனைத் தொடர்ந்து வனவாழ் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த முதலை மீட்புக்குழுவால் மீட்கப்பட்டு வன துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த முதலை குளத்திற்கு அருகே உள்ள விஸ்வாமித்திர ஆற்றிலிருந்து தப்பி இந்த குளத்திற்கு வந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

Leave a Reply