இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

0

இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பன்னமடங்காக அதிகரித்து வருகின்றது.

இதற்கமைய நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 2,642 பேர் புதிய கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் புதுவருட கொத்தணியுடன் தொடர்புடைய 2,641 பேரும், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த ஒருவரும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் இதுவரை காலமும் கொவிட் தொற் றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 485,922 ஆக அதிகரித்துள்ளது,

Leave a Reply