கோதுமை மாவுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு!

0

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச அளவிலான ஆதரவு விலையை நிர்ணயித்து மத்திய அரசு கொள்முதல் செய்து வருகின்றது.

இந்நிலையில் சம்பா மற்றும் குருவை பருவங்களில் 23 பயிர்களுக்கு தற்போது மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து வருகின்றன.

குறுவை பொறுத்த வரை கோதுமை மற்றும் கடுகு போன்றவை முக்கிய பயிராகக் கருதப்படுகிறது.

இந்தப் பயிர்களுக்கு குறைந்தபட்ச அளவு விலையை மத்திய அரசு உயர்த்தி வருகிறது.

இந்நிலையில் முக்கியமாக கோதுமைக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூபா 40 உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் குவிண்டல் ஒன்றின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூபா 1,975 ல் இருந்து ரூபா 2,015 ஆக உயர்வடைந்துள்ளது.

இதன் பிரகாரம் கோதுமை உற்பத்தி செலவு குவிண்டால் ஒன்றுக்கு ரூப 1,008 ஆக மதிப்பிடப்பட்டு உள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போல் கடுகு விதைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையையும் குவிண்டால் ஒன்றுக்கு ரூபா 400 உயர்த்தப்பட்டு, ரூபா 5,050 5 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு ஏனைய குறுவை பயிர்களான மசூர் பருப்புக்கு குவிண்டாலுக்கு ரூபா 400 அதிகரிக்கப்பட்டுள்ளது.

பருப்புக்கு ரூபாய் 130 ம், குங்குமப்பூ என்றால் ரூபா 114 உயர்த்தப்பட்டிருக்கிறது.

மேலும் பல வகை பயிர்களும் விளைவிப்பதை ஊக்குவிப்பதற்காகவே இந்த விலை நிர்ணயித்திற்கான காரணமாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply