தங்கம் விலை தொடர்பில் வெளியான தகவல்!

0

கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது.

இந்நிலையில் பவுன் ரூ.36 ஆயிரத்தை நெருங்கியபடி இருந்தது.

அத்துடன் கடந்த 4-ந் திகதி ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 968-க்கு விற்கப்பட்டது.

இதனால் பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து குறைந்தது.

நேற்று பவுனுக்கு ரூ.56 குறைந்து ரூ.35 ஆயிரத்து 776-க்கு விற்றது.

இன்று 3-வது நாளாக தங்கம் விலையில் தொடர்ந்து சரிவு காணப்பட்டது.

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.35 ஆயிரத்து 616-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4,452-ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.69 ஆயிரத்து 100 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.10-க்கு விற்கிறது.

கடந்த மாதம் தங்கம் விலையில் தொடர்ந்து உயர்வு காணப்பட்டது. பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது.

அதன்பின் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்ததால் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

தற்போது தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் வருமா? என்ற எதிர்பார்ப்பு நடுத்தர மற்றும் ஏழை மக்களிடம் நிலவுகிறமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply