கொவிட் தொற்றாளர்களை அடையாளம் காணும் நோக்கில் பி.சி.ஆர் மற்றும் ரப்பிட் அண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறித்த பரிசோதனைகள் அனைத்தும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மேற்கொள்ளவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் அடையாளம் காணும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கைக்கு அமைய, கொவிட் தொற்றின் தன்மையை மதிப்பிட முடியாது என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும் கொவிட் நோயின் அறிகுறிகள் உள்ளவர்கள் மாத்திரமே கொவிட் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணியவர்களுக்கும் மாத்திரமே குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.



