மீண்டும் வெற்றி பட இயக்குனருடன் கை கோர்த்த நடிகர்!

0

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை நடித்தவர் தான் நடிகர் ஜெயம் ரவி.

இவர் படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளை மக்களுக்கு பிடிக்கும் படி தேர்ந்தெடுத்தார்.

அத்துடன் நடிகர் ஜெயம் ரவி தற்போது பொன்னியின் செல்வன் படத்தை நடித்து முடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இவர் யாருடன் கை கோர்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது பூலோகம் என்ற வெற்றி படத்தை கொடுத்த கல்யாண் இயக்கத்தில் ஜெயம் ரவி மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் குறித்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 15-ஆம் திகதி தொடங்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பூலோகம் போல் இந்தப்படமும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என அனைவரினதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply