இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் வரியை அதிகரிக்குமாறு வெங்காய உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

0

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்காக விதிக்கப்படுள்ள வரியை அதிகரிக்குமாறு உள்ளூர் பெரிய வெங்காய உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தங்களது அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள மையால், இறக்குமதி பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமுக்காக விதிக்கப்பட்டுள்ள 25 சதம் என்ற வரியை மேலும் அதிகரிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தங்களது உற்பத்திக்கு 70 முதல் 80 ரூபா வரையில் விலை இருந்தாலும் கூட சந்தையில் குறித்த விலைக்கு தங்களது உற்பத்திகளைக் கொள்வனவு செய்யாமல் அதனை விட குறைந்த விலையில் சென்னையில் உள்ள இந்திய மற்றும் பாகிஸ்தான் வெங்காயம் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply