சீனி மற்றும் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை!

0

இலங்கையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலை மிகவும் வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில் சீனி மற்றும் அரிசிக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன குறிப்பிட்டிருந்தார்.

இதற்கமைய ஒரு கிலோ பொதி செய்யப்பட்ட சீனியை விற்பனை செய்யக் கூடிய அதிகபட்ச சில்லரை விலையாக 130 ரூபா பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பொதி செய்யாமல் விற்கப்படும் சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 125 ரூபாவாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கீறி சம்பா 1 கிலோ 136 ரூபாவுக்கும், வெள்ளைச் சம்பா 1 கிலோ 101 ரூபாவுக்கும், வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரசிக்கு அதிகபட்ச சில்லறை விலையாக 101ரூபாவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த விலைகள் நுகர்வோர் விவகார அமைச்சின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply