கேரள மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்த தீர்மானம்!

0

கேரள மாநிலத்தில் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் நேற்றைய தினமும் மாத்திரம் அங்கு 30 ஆயிரத்து 803 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த மாநிலத்தில் தொற்று விகிதம் 20 சதவீதத்துக்கு மேல் நீடித்து வருகின்றது.

மேலும் அந்த மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு நடவடிக்கைகளை அமுல்படுத்த தயங்குவதே குறித்ததொற்றுப் பரவல் அதிகரிப்பதற்கான காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் அவர்களது வீடுகளிலேயே வைத்து தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வரப்பட்டுள்ளது.

மேலும் அந்த மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த வேண்டியும் குறிப்பாக பண்டிகை காலங்களில் இவற்றை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply