ஆசிரியர்கள் கொடுப்பனவை தனியார் பேருந்து ஊழியர்களுக்கு கொடுக்குமாறு கோரிக்கை!

0

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ளமையால் தனியார் பேருந்து உரிமையாளர்களும், ஊழியர்களும் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

குறிப்பாக தனது அன்றாட வாழ்க்கையே முன்னெடுக்க முடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆசிரியர்களுக்கும், அரச ஊழியர்களுக்கும், இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் வேதனம் கிடைக்கின்றது.

ஆனால் பேருந்து உரிமையாளர்களுக்கு எந்தவித்தமான கொடுப்பனவும் கிடைப்பதில்லை.

இதன் பிரகாரம் ஆசிரியர்கள் கொடுப்பனவை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த கொடுப்பனவை தனியார் பேருந்து ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு கோருவதாக தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன அறிவித்துள்ளார்.

தனியார் பேருந்து ஊழியர்களை மீட்பதற்கு ஆக குறைந்தது 5 லட்சம் ரூபாய் இழப்பீடாவது வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply