தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தபடுமா? நீட்டிக்கப்படுமா?

0

நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 6ஆம் திகதிக்கு பின்னர் தளர்த்தபடுமா?அல்லது நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து இதுவரையில் எந்த விதமான தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் கொவிட் உயிரிழப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்யே குறித்து முடிவு எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து சுகாதார தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியே இறுதிகட்ட தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Leave a Reply