இலங்கையின் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று திறப்பு!

0

நாட்டில் தற்போது பயணத்தடை விதிக்கப்படுள்ள காலப்பகுதியிலும் இலங்கையின் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்றும் நாளையும் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த பொருளாதார மத்திய நிலையங்கள் அனைத்தும் மொத்த விற்பனைக்காக மாத்திரம் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் விதிக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளுகமைய அதன் செயற்பாடுகள் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வர்த்தகர்கள் மற்றும் அவரது உதவியாளர்கள் போக்குவரத்து அனுமதியினை தங்களது பிரதேச செயலகங்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்,

Leave a Reply