இலங்கையில் நாளுக்கு நாள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் கடந்த 10 நாட்களில் மாத்திரம் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களின் எண்ணிக்கை 1,800 ஐ கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் நேற்றைய தினத்தில் பதிவான 190 கொவிட் மரணங்களுடன் நாட்டில் பதிவான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 7,750 ஆக அதிகரித்துள்ளது..
மேலும் கடந்த 10 நாட்களில் 1,815 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
இலங்கையில் கொவிட் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களின் சதவீதமானது 1.94 ஆக உயர் வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



