கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 37,593 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நாடு பூராகவும் இந்த தொற்றால் ஒரே நாளில் மாத்திரம் மேலும் 648 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவி 3,25,12,366 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில். 3,17,54,281 குணமடைந்துள்ளனர்.4,35,758 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,22,327 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.



