இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுக்கும் நிருபர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்.

0

இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுக்கும் நிருபர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதற்கமைய குறித்த கலந்துரையாடல் நேற்றைய தினம் பெங்களூரில் உள்ள கவர்னர் மாளிகையில் இடம்பெற்றது.

அத்துடன் குறித்த கலந்துரையாடலில் நாம் எப்போதும் தாய் மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறு நாடாளுமன்ற கூட்டத்தில் தாய்மொழியில் பேச தான் அனுமதிக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மத்திய அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளில் தாய்மொழிக் கல்வியை அறிமுகம் செய்துள்ளது.

இதன் பிரகாரம் தாய்மொழி நன்கு வளர்ச்சி அடையும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அத்துடன் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சில எம்பிகள் கலாட்டா செய்து சபையை நிறுத்தியுள்ளனர்.

அது மாத்திரமன்றி மந்திரிகள் கைகளில் வைத்திருந்த ஆவணங்களை பறித்து கிழித்து எறிந்துள்ளார்.

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சில உறுப்பினர்கள் தரம் தாழ்ந்து செயல்பட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply