உலகலாவிய ரீதியில் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இலங்கையில் குறித்த தடுப்பூசிகள் செலுத்தும் செயற்பாடுகள் பாராட்டத்தக்கது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அலகா சிங் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய புதிய சுகாதார அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல பதவியேற்றதன் பின்னர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி ஒருவரை சந்திப்பது இதுவே முதல் தடவையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டுக்கு அவசர வைத்திய வசதிகளை வழங்குவது குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடி பிராணவாயு விநியோகிக்கும் செயற்பாட்டிலும் கவனம் செலுத்தப்பட்டது அவர் குறிப்பிட்டுள்ளார்.



