செப்டம்பர் 10-ஆம் திகதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் திரைப்படம்!

0

நடிகர் சாந்தனு மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் தான் “டிக்கிலோனா” கார்த்திகை யோகி இயக்கியுள்ள குறித்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அனகா மற்றும் ஷிரின் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

மேலும் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இதன் அடிப்படையில் குறித்த படத்தின் ரிலீஸ் திகதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் 10-ஆம் திகதி விநாயகர் சதுர்த்தி அன்று குறித்த படம் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நடிகர் சந்தானம் நடித்துள்ள படங்கள் ஓடிடி-யில் வெளியானது இதுவே முதன்முறை.

மேலும் அன்றைய தினம் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் படமும் வெளியிடப்பட உள்ளது.

மேலும் குறித்த படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply