எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாணின் விலையில் அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமையவே எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஒரு இறாத்தல் பாணின் விலை5.00 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன் ஏனைய வெதுப்பாக உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு கிலோ கேக்கின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக வெதுப்பாக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.



