நாடு பூராகவும் கொவிட் தொற்றின் தாக்கம் மிக வேகமாக பரவலடைந்துவருகின்றது.
இந்நிலையில் இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் கொட்டகலை பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்டுள்ளது.
அத்துடன் கொட்டகலை பிரதேச சபை மற்றும் கொட்டகலை வர்த்தக சங்கத்தினர் இடையில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் குறித்த தீர்மானம் போது எட்டப்பட்டது.
மேலும் கொட்டகலை அண்டிய பகுதிகளில் அதிகளவான கொவிட் 19 நோயாளர்கள் கண்டறிய பட்டதை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



