இன்று சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டபுதிய சுகாதார வழிகாட்டி!

0

சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைக்காக இன்று முதல் வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே வழியே செல்ல முடியும் என குறித்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை அனைத்து உடல் பிடிப்பு மற்றும் உடற்பயிற்சி நிலையங்கள், சிறுவர் பூங்காக்கள், உலக விளையாட்டு அரங்குகள், நீச்சல் தடாகங்கள் என்பன மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இசை நிகழ்ச்சிகள் மற்றும் கடற்கரை களியாட்ட நிகழ்வுகள் என்பனவும் நடத்தப்படக் கூடாது என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அறநெறிப் பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புக்களை நடத்துவதை நிறுத்துமாறும் புதிய சுகாதார வழிகாட்டியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் வீடுகளிலும் மேலதிக ஒன்றுகூடல் களை நடத்த முடியாது என்றும் குறித்த வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply