தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் தல அஜித்.
தற்போது இவரின் திரைப்படங்கள் தொடர்ந்தும் பெரிய வரவேற்பு பெற்று வருகின்றது.
இந்நிலையில் இவர் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
மேலும் தல அஜித் திரைப்படங்கள் நடிப்பது மட்டுமன்றி பன்முக திறமைகளை கொண்டவராக விளங்குகின்றார்.
அதன் அடிப்படையில் சமீபத்தில் அதன் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்றிருந்தார்.
இந்நிலையில் தற்போது அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தல அஜித் பங்கேற்க உள்ளதாகவும் இதற்காக இதன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



