இலங்கையில் இன்று முதல் மூடப்படும் வர்த்தக நிலையங்கள்.

0

நாட்டில் தற்போது நிலவும் அச்சுறுத்தல் நிலை காரணத்தினால் சில நகரங்களின் வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த வர்த்தக நிலையங்கள் இன்று முதல் மூடப்படும்.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொதுச் சந்தை இன்றைய தினம் முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே குறித்த தீர்மானம் எட்டப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையமும் இன்று முதல் எதிர்வரும் சில தினங்களுக்கு மூடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் சிலருக்கு கொவிட் 19 தொற்று உறுதியானதையடுத்து தீர்மானம் எட்டப்பட்டது.

மேலும் கொவிட் வைரஸ் பரவல் காரணமாக நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை நகரங்கள் நாளையதினம் முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply