டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள முதலமைச்சர்!

0

அடுத்த மாதம் 15ஆம் திகதி அண்ணா பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் தி.மு.க மிகச் சிறப்பாக கொண்டாடவுள்ளது.

குறித்த விழாவுடன் தி.மு.க தொடக்க நாள் விழா, பெரியார் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழாவாகக் கொண்டாடப் படவுள்ளது.

இந்நிலையில் குறித்த விழா முடிந்ததும் தி.மு.கவுக்கு டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தையும் திறந்து வைக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

அத்துடன் இந்நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

மேலும் இந்த நிகழ்வில் பங்கேற்பதாக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அடுத்த மாதம் 16ஆம் திகதி டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

17ஆம் திகதி விழா நிகழ்ச்சிகளை நடத்தி முடித்துவிட்டு மறுநாள் சென்னை திரும்புவார் என டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply