எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நாட்டை முடக்குவதற்கு தீர்மானம்!

0

அரசாங்கம் நாட்டையும் முடக்குவதற்கான நடவடிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் எடுக்காவிட்டால் தொழிற்சங்கங்களின் ஊடாக நாட்டை முடக்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தேசிய தொழிற்சங்க மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த விடயத்தை அரசு மற்றும் தனியார் பிரிவுகள் உள்ளடக்கிய தொழிற்சங்கங்களின் பங்கேற்புடன் கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் தற்போது மக்களின் பாதுகாப்பு தொடர்பில் சிந்திக்காது அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது..

இதன் பிரகாரம் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply