கர்ப்பிணி தாய்மார்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு அவர்களுக்கென தடுப்பூசிகளை செலுத்துவதற்கு தனிப்பட்ட தடுப்பூசி செலுத்தல் மையங்களை ஆரம்பிக்கப்படும் என குடும்ப நல சுகாதார சேவைகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கமைய தற்போது முன்னெடுக்கப்படும் தடுப்பூசி மையங்களுக்கு கர்ப்பிணித் தாய்மார்கள் சென்று தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதனால் அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய அபாயமுள்ளதாக சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் மத்தியில் டெல்டா திரிபு தொற்றுடையவர்கள் இருக்கக்கூடும்.
இந்நிலையில் குறித்த நிலையினைக் கருத்திற்கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொவிட் 19, தடுப்பூசியை செலுத்துவதற்கு வாரத்திற்கு ஒரு முறையேனும் அல்லது சில மணித்தியாலங்கள் ஒதுக்கியேனும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலோ அல்லது பிரதேச வைத்தியசாலையிலோ நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.



