32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதற்கமைய குறித்த போட்டியில் இந்தியா சார்பில் 126 வீர வீராங்கனைகள் 18 விளையாட்டுகளில் பங்கேற்றனர்.
அத்துடன் இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அதிகபட்சமாக 7 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது.
ஈட்டி எறிதல் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
ஒலிம்பிக்கில் தடகளத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சிறப்புமிக்க சாதனையை அவர் படைத்துள்ளார்.
அத்துடன் பல தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, மல்யுத்த வீரர் ரவிக்குமார் தகியா ஆகியோர் வெள்ளி பதக்கமும், பேட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் பல பதக்கத்தையும் பெற்றனர்.
பிவி சிந்து ஒலிம்பிக்கில் 2 பதக்கம் பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
இந்நிலையில் ஆக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் கிடைத்தது41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் ஆக்கியில் இந்தியா பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்தது.
அத்துடன் குறித்த ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து கொடுத்து பாராட்டியுள்ளார்.
மேலும் சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றவர்களையும் அதில் பங்கேற்ற அவர்களையும் பாராட்டினார்.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் வீராங்கனைகளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார்.
அவரது இல்லத்தில் சந்தித்து அவர்களுக்கு இதனை நரேந்திர மோடி காலை உணவு வழங்கினார்.
பின்னர் பதக்கம் வென்ற ஒவ்வொரு வீர வீராங்கனைகளையும் தனித்தனியாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



